பொலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, தனது தாய்மைப் பயணம் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள கருத்துகள் கவனத்தைப் பெற்றுள்ளன.
நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தேஜஸ்வினிக்கு, திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
அண்மையில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது குழந்தையைப் பெறுவதற்காக ஐந்து முறை செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சை மிகவும் சவாலான ஒரு செயல்முறை. அதனை எதிர்கொள்ள மனதளவில் மிகுந்த வலிமை தேவை. பல ஊசிகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாமதமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள எடுத்த முடிவு உடல் மற்றும் மனரீதியாகப் பல சவால்களை ஏற்படுத்தியதாகவும், பெண்கள் தங்களது குடும்பத் திட்டமிடல் குறித்து முன்கூட்டியே சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சிகிச்சையின்போது 1,000க்கும் மேற்பட்ட ஊசிகளை எடுத்துக்கொண்டதாகவும், ஐந்து முயற்சிகளில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறிய தேஜஸ்வினி, ஐந்தாவது முயற்சியிலேயே தனக்குத் தாயாகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது அனுபவத்தைப் பகிர்வதன் மூலம், கருத்தரிப்புச் சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
ஒரு காணொளி அழைப்புக்கு 6 ,000 ரூபாய் – செயலி மூலம் வருமானம் ஈட்டும் நடிகை தர்ஷா குப்தா
Local
24 July 2026
ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஒஸ்திரிய அரசு
Local
24 July 2026
பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்றச் செயலாளராக இலங்கைத் தமிழரான உமா குமரன் நியமனம்!
Local
24 July 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வி
Local
24 July 2026
வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது
Local
24 July 2026
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதவி விலகல்
Local
24 July 2026
7 நாட்களில் இத்தனை கோடி வசூலா?: சாதனை படைக்கும் ‘தி ஒடிசி’
Local
24 July 2026
பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் தணியாத போராட்டம்
Local
24 July 2026
முன்னாள் காதலருடன் மீண்டும் சேர லட்சக்கணக்கில் செலவிடும் பெண்கள்: போலி ஒன்லைன் சேவைகள்
Local
24 July 2026
குழந்தைக் கடத்தல் வழக்கில் 19 பேருக்குத் தண்டனை: சிங்கப்பூரில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கேள்வி
Local
24 July 2026