General01 August 2026

பேங்கொக்கிலிருந்து அனுப்பப்பட்ட ரூ. 10.6 கோடி பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி  மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து UL405 வானூர்தியின் மூலம் பரிசுப் பொதியாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சரக்கு கடந்த ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB களஞ்சியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes