அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை, குடும்பங்களின் சமூக-பொருளாதார பாதிப்பு நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பில் ஆராயப்பட்டது.
குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், இருப்பிட வசதி, அடிப்படைச் சேவைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் கடன்பாடுகள் ஆகிய சமூக-பொருளாதாரக் காரணிகள் புதிய தெரிவில் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.
தற்போதைய தெரிவு செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புதிய முறைமையின் பயனுள்ள தன்மையை ஆராய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்த நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய சமூக-பொருளாதார கட்டமைப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
Latest News
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு!
Local
04 August 2026
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026