இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, சமூக சேவையாளர் கம்பம் ஜெயராஜுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் இலங்கையை பாதித்த இயற்கை அனர்த்த காலத்தில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்களித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் பாராட்டியுள்ளார்.
இதன்போது செந்தில் தொண்டமான் பல்வேறு கோரிக்கைகளையும் இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்.
அவற்றில், பெருந்தோட்ட மக்களுக்காக OCI (Overseas Citizen of India) அட்டையை கட்டணச் சலுகையுடன் அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்புறுதி திட்டத்தின் பயன்களை இலங்கையில் லங்கா எல்.ஐ.சி. ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் அடங்கும்.
அத்துடன், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு
Local
11 August 2026
இரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை
Local
11 August 2026
கிறிஸ் கெய்லின் துடுப்பாட்ட மட்டை குறித்து இந்திய வீரரின் சுவாரஸ்ய தகவல்!
Local
11 August 2026
கன்னட திரையுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மரண வழக்கு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு - அவசர நிலை பிரகடனம்
Local
11 August 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
11 August 2026
தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள்: சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்!
Local
11 August 2026
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: 'குடு அஞ்சு'வின் சதி என காவல்துறை சந்தேகம்!
Local
11 August 2026
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம் பெரும் வெற்றி: ஹொலிவுட் நடிகை ரோசமண்ட் பைக் பாராட்டு!
Local
11 August 2026
கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்!
Local
11 August 2026