மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டடக்கலைஞர் மினெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின் போது நிகழ்ந்த, அதிகம் அறியப்படாத ஒரு சம்பவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஓவியம் ஒன்று, புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.

Latest News
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026