இலங்கையில் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 277 ரூபாயால் அதிகரித்துள்ளது.
ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாதமொன்றுக்கு தேவையான குறைந்தபட்ச தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஜூன் மாதத்தில் கொழும்பு மாவட்டத்தின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 18,973 ரூபாயாகவும், கம்பஹா மாவட்டத்தில் 18,876 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, குறைந்தபட்ச உத்தியோகபூர்வ வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு அது 16,821 ரூபாயாக உள்ளது.
தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 18,500 ரூபாயாகவும், யாழ்ப்பாணத்தில் 17,169 ரூபாயாகவும், மன்னார் மாவட்டத்தில் 18,019 ரூபாயாகவும் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,688 ரூபாயாகவும், கிளிநொச்சியில் 16,996 ரூபாயாகவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17,671 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Latest News
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
Local
27 August 2026
கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் தொடருந்து ஊழியர்களுக்கு விசேட சுற்றுநிருபம்!
Local
27 August 2026
2032 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான உற்பத்தியே இலக்கு: இலங்கையின் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டம்!
Local
27 August 2026
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
Local
27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
Local
27 August 2026
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
Local
27 August 2026
அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!
Local
27 August 2026
ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!
Local
27 August 2026
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!
Local
27 August 2026
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்
Local
27 August 2026