ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 360 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பல வீதிகள் மற்றும் தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நால்வரில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீட்புப் பணிகளுக்காக ஜப்பான் இராணுவத்தினரும் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தான் இதற்கு முன்னர் பல பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்தபோதிலும், இதுபோன்றதொரு நிலைமையை ஒருபோதும் அனுபவித்ததில்லை என சிபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து தடைப்பட்டதால் நரிடா வானுார்தி நிலையத்தில் சுமார் 7,000 பேர் சிக்கித் தவிப்பதாக வானுார்தி நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Latest News
‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு
Local
22 August 2026
களத்தில் இறங்கிய ஜனாதிபதி: எல்நினோ பாதிப்பை எதிர்கொள்ள அதிரடி திட்டங்கள்!
Local
22 August 2026
"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் அம்மாதான்" – ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
Local
22 August 2026
மறைந்த பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி அஞ்சலி
Local
22 August 2026
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!
Local
22 August 2026
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!
Local
22 August 2026
கல்முனை மருத்துவமனை சீருடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
Local
22 August 2026
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை
Local
22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!
Local
22 August 2026
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!
Local
22 August 2026