Top Story
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீ;டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் இலங்கை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ஐஊனு எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த சிகிச்சைக்குப் பின்னர் சல்லேவுக்கு தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சல்லேயின் மனைவி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.

அத்துடன், சல்லே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
விபரங்களுக்கு
General22 August 2026
அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் மனைவி, ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
International News

எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

International 22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு

International 22 August 2026
‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!

International 22 August 2026
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!

நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை

International 22 August 2026
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!

International 22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!

விஜய் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையூட்டல் கேட்டார்களா? அழுத்தம் ஆரம்பம்!

International 22 August 2026
விஜய் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையூட்டல் கேட்டார்களா? அழுத்தம் ஆரம்பம்!

விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம்: 4 இலட்சம் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

International 22 August 2026
 விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம்: 4 இலட்சம் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

விஜய் அரசாங்கத்தின் வாகனங்கள் எங்களுக்கு வேண்டாம்- உதயநிதி அதிரடி அறிவிப்பு

International 22 August 2026
விஜய் அரசாங்கத்தின் வாகனங்கள் எங்களுக்கு வேண்டாம்- உதயநிதி அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: கனேடிய மாகாணங்களில் இருந்து வெளியாகும் முரண்பட்ட கருத்துக்கள்

International 22 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: கனேடிய மாகாணங்களில் இருந்து வெளியாகும் முரண்பட்ட கருத்துக்கள்

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்தவுள்ள பல மில்லியன் நிலுவை நிதி

International 22 August 2026
ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்தவுள்ள பல மில்லியன் நிலுவை நிதி

வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி

International 22 August 2026
 வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி

'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா

International 22 August 2026
'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா

மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;

International 22 August 2026
மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;

மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

International 22 August 2026
மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா

International 22 August 2026
வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா
More News
General22 August 2026

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களால் 1,654 உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை 1,654 உயிரிழப்பு வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார். இந்த விபத்துகளில் மொத்தம் 1,749 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான சாலை விபத்துகளில் காயமடைந்த 4,556 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான விபத்துகளில் காயமடைந்த 7,295 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்ட 3,232 விபத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில்: 576 பேர் — பாதசாரிகள் 617 பேர் — உந்துருளி ஓட்டுநர்கள் 122 பேர் — உந்துருளிகளின் பின்னிருக்கை பயணிகள் 119 பேர் — ஈருருளி ஓட்டுநர்கள் 139 பேர் — வாகன ஓட்டுநர்கள் 173 பேர் — பயணிகள் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களால் 1,654 உயிரிழப்பு
General22 August 2026

கொழும்பு போர்ட் சிட்டி கடத்தல், : 3 சீனர்களை தேடும் இலங்கை காவல்துறை

கொழும்பு துறைமுக நகர் என்று கூறப்படும் போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் 3 சீன சந்தேகநபர்களை இலங்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர். முன்னதாக, கடந்த ஜூலை 23ஆம் திகதியன்று கொழும்பு துறைமுக நகரில் வைத்து, இரண்டு சீனர்கள் மீது மற்றுமொரு சீனக்குழுவினர் தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவர் கடத்தி, உயிரிழந்ததாக காவலர்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 2 சீன நாட்டவர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்களின் விசா காலம் முடிவடைந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் வானூர்தி அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கலாம் எனவும் காவல்துறையினர் எச்சரி;த்துள்ளனர். இந்தநிலையில் குறித்தவர்களின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

விபரங்களுக்கு
கொழும்பு போர்ட் சிட்டி கடத்தல், : 3 சீனர்களை தேடும் இலங்கை காவல்துறை
General21 August 2026

வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு நிலவுவதுடன், அவர்கள் ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்கின்றனர். தற்போது தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
General21 August 2026

இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பரவி வரும் இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. தற்போது வர்த்தகப் பயிரான இஞ்சி, குருணாகல், கண்டி, மாத்தளை, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த நோய் தொற்றியிருந்தால், அதுபோன்ற புதர்களை எரித்து அழிக்குமாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
General21 August 2026

எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது. அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை இந்த வறட்சியான வானிலை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் எழக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, தடங்கலின்றி நீரை வழங்குவதையும் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சினால் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போத்தல் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின் அளவு 6 லீட்டரிலிருந்து 15 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிப்பதற்காக தற்போது 324 நீர் பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப பிரதேச செயலாளர்கள் அல்லது பாதுகாப்புப் படையினரின் நீர் பௌசர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வறட்சியினால் ஏற்படும் பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இனிவரும் காலத்தில் ஏற்படக்கூடிய மழைக்கால நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
International News

எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

International 22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு

International 22 August 2026
‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!

International 22 August 2026
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!

நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை

International 22 August 2026
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!

International 22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!

விஜய் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையூட்டல் கேட்டார்களா? அழுத்தம் ஆரம்பம்!

International 22 August 2026
விஜய் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையூட்டல் கேட்டார்களா? அழுத்தம் ஆரம்பம்!

விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம்: 4 இலட்சம் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

International 22 August 2026
 விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம்: 4 இலட்சம் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

விஜய் அரசாங்கத்தின் வாகனங்கள் எங்களுக்கு வேண்டாம்- உதயநிதி அதிரடி அறிவிப்பு

International 22 August 2026
விஜய் அரசாங்கத்தின் வாகனங்கள் எங்களுக்கு வேண்டாம்- உதயநிதி அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: கனேடிய மாகாணங்களில் இருந்து வெளியாகும் முரண்பட்ட கருத்துக்கள்

International 22 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: கனேடிய மாகாணங்களில் இருந்து வெளியாகும் முரண்பட்ட கருத்துக்கள்

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்தவுள்ள பல மில்லியன் நிலுவை நிதி

International 22 August 2026
ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்தவுள்ள பல மில்லியன் நிலுவை நிதி

வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி

International 22 August 2026
 வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி

'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா

International 22 August 2026
'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா

மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;

International 22 August 2026
மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;

மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

International 22 August 2026
மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா

International 22 August 2026
வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா
Sports Stories
Explore More
விதிமுறை மீறல்: லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதித்த MLS!

விதிமுறை மீறல்: லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதித்த MLS!

மேஜர் லீக் சாக்கர் (MLS) போட்டியில் எதிரணி வீரரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கையை வைத்ததன் மூலம் லீக் விதிமுறைகளை மீறியதாக, இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலடெல்பியா யூனியன் (Philadelphia Union) அணிக்கு எதிரான போட்டியின் 101ஆவது நிமிடத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், மெஸ்ஸி மற்றும் அதேபோன்ற விதிமீறலில் ஈடுபட்ட இன்டர் மியாமி வீரர் இயன் ஃப்ரே (Ian Fray) ஆகியோருக்கு MLS ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டியின் போது சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிலடெல்பியா அணியின் காவன் சுல்லிவன் (Cavan Sullivan) என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு போட்டித் தடையும் அபராதமும், சுயாதீனக் குழுவின் மேல்முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, போட்டியில் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறத் தவறிய ரொறன்டோ எஃப்.சி. (Toronto FC) வீரர் வாக்கர் சிம்மர்மேன் (Walker Zimmerman) மற்றும் போலியாக விழுந்து ஏமாற்ற முயன்ற மின்னசோட்டா யுனைடெட் (Minnesota United) வீரர் அந்தோனி மார்கனிச் (Anthony Markanich) ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
விக்கெட்டை வீழ்த்திய பின் வீராங்கனை செய்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்!

விக்கெட்டை வீழ்த்திய பின் வீராங்கனை செய்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்!

மகளிர் டெல்லி பிரீமியர் லீக் (WDPL 2026) தொடரின் தொடக்கப் போட்டியில், சென்ட்ரல் டெல்லி குயின்ஸ்(Central Delhi Queens) அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேதாவி பிதூரி (Medhavi Bidhuri) விக்கெட் வீழ்த்திய பின்னர் செய்த வித்தியாசமான '67' கொண்டாட்டம் (Celebration) இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் (South Delhi Superstarz) அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிஷிகா சிங் (Nishika Singh) 50 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மேதாவி பிதூரியின் பந்துவீச்சில் ஆருஷி கோயலிடம் (Arushi Goel) பிடிப்பு கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டை வீழ்த்தியதும், மேதாவி பிதூரி தனது ஜெர்ஸியில் உள்ள '67' என்ற எண்ணை சுட்டிக்காட்டி செய்த '6-7' கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேதாவி பிதூரி இந்தப் போட்டியில் 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மகளிர் டெல்லி பிரீமியர் லீக்கின் 3 ஆவது பருவம் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!

கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்தத் தொடரின் முதல் ஐந்து கட்டப் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வெஸ்லி சோ மற்றும் ஃபேபியானோ கருணா ஆகியோர் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!

அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டீபன் பிளமிங், ஹசியை தனது பயிற்சிக் குழுவில் சேர்க்க விரும்புவதாக கூறப்படுகிறது. பிளமிங்குடன் நெருங்கிய நட்பு இருப்பதாகக் கூறிய ஹசி, வாய்ப்பு வந்தால் பரிசீலிப்பேன் என்றும், ஆனால் குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 2022 இல் 20க்கு 20 உலகக் கிண்ணத்தின்போது, இங்கிலாந்தின் துடுப்பாட்ட ஆலோசகராக ஹசி பணியாற்றியிருந்தார். மேலும் அந்தத் தொடரில் இங்கிலாந்து கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ருமேஷ் தரங்க அபாரம்: லுசானே டைமண்ட் லீக்கில் இலங்கைக்கு தங்கம்

ருமேஷ் தரங்க அபாரம்: லுசானே டைமண்ட் லீக்கில் இலங்கைக்கு தங்கம்

இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, சுவிட்ஸர்லாந்தின் லுசானேவில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் செம்பியன் நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்படி இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 9 செ.மீற்றர்களாகும். ருமேஷின் 2026 பருவம் ஏற்கனவே சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது. ரோம் டைமண்ட் லீக்கில் அவர் 92.62 மீட்டர் எறிந்து இலங்கை தேசிய சாதனையையும் டைமண்ட் லீக் சாதனையையும் படைத்திருந்தார். அத்துடன், 2026 பொதுநலவாயப்; போட்டியில் 89.75 மீட்டர் எறிந்து தங்கம் வென்றதன் மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றையும் ருமேஷ் படைத்துள்ளார். இந்தநிலையில்,23 வயதிலேயே உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக ருமேஷ் தரங்கா உருவெடுத்துள்ளார்.

விபரங்களுக்கு
பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை

பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை

சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹெடின்லியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது அப்துல்லா ஷாபிக் 61 ஓட்டங்களை பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் எவரும் 30க்கும் அதிக எண்ணிக்கை ஓட்டங்களை பெறவில்லை. ஒலே ரொபின்சன் 5 விக்கட்டுக்களையும், ஜோஸ் டங் 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடு;த்தாடிய இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 409 ஓட்டங்களை பெற்றது ஹரி ப்ரூக் 91 ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பெடு;த்தாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தானிய அணி, 135 ஓட்டங்களுக்குள் அனைத்து வீரர்களின் விக்கட்டுக்களையும் இழந்தது. இதன்படி, இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களால் அந்த அணி தோல்வியடைந்தது. இந்தப்போட்டியில் வெற்றியீட்டிதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை பெறுகிறது. அதேநேரம், உலக செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி, 7ஆம் திகதி இடத்தை பெற்றுள்ளது. குறித்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணி, முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ், இந்தியா என்ற அடிப்படையில் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தவிர இலங்கை அணி 6 வது இடத்தை வகிக்கும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியும் பாகிஸ்தான் அணி, இறுதியான 8வதும்,9 வதுமான இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!

தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!

கால்பந்து சிறப்பாட்டக்காரர் லியோனல் மெஸ்சி தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது முதல் கோலை அடித்துள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் சக்கர் (MLS) போட்டியில் அவர் அங்கம் பெற்றுள்ள இன்டர் மியாமி (Inter Miami) அணி பிலடெல்பியா யூனியன் (Philadebhia Union) அணியுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையைத் தழுவியது. ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இடது காலால் மிக அற்புதமான முறையில் கோலடித்த மெஸ்சி, கோலடித்ததும் தனது கைகளால் வானத்தை நோக்கி நன்றி செலுத்தினார். மெஸ்சியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்சி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று தனது 68-வது வயதில் காலமானார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொந்த ஊரிலிருந்து திரும்பிய மெஸ்சி, தனது முன்னைய இரண்டு போட்டிகளில் கோலடிக்கத் தவறியிருந்த நிலையில், தற்போது கோல் கணக்கை ஆரம்பித்துள்ளார். இந்த பருவத்தில் இன்டர் மியாமி அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்சி, மொத்தம் 13 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் லீக்கின் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
54 வயதில் இரண்டாவது திருமணம் – 39 வயது காதலியை கரம் பிடித்த பிரபல பொலிவுட் நடிகர்

54 வயதில் இரண்டாவது திருமணம் – 39 வயது காதலியை கரம் பிடித்த பிரபல பொலிவுட் நடிகர்

பிரபல பொலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், தனது நீண்டகால காதலியும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விளம்பர நடிகையுமான கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸை கோவாவில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 54 வயதான அர்ஜுன் ராம்பால், 39 வயதான கேப்ரியெல்லாவுடன் பல ஆண்டுகளாகக் காதல் உறவில் இருந்து வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் ராம்பாலும் கேப்ரியெல்லாவும் 2018ஆம் ஆண்டு சந்தித்ததாகவும், பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸ் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் ஆடை வடிவமைப்பாளரும் ஆவார். விளம்பரத் துறையில் பிரபலமடைந்த அவர், பின்னர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.நாகர்ஜுனா மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஊபிரி’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.பொலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் ராம்பால், அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தில் மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அர்ஜுன் ராம்பால் இதற்கு முன்னர் விளம்பர நடிகையான மெஹர் ஜெசியாவைத் திருமணம் செய்திருந்தார்.சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின்னர், இருவரும் 2018ஆம் ஆண்டு பிரிந்தனர். 2019ஆம் ஆண்டு அவர்களது விவாகரத்து சட்டபூர்வமாக நிறைவடைந்தது.இவர்களுக்கு மஹிகா மற்றும் மைரா என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு

"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் அம்மாதான்" – ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

முதலமைச்சர் விஜய்யின் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். "என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என் அம்மாதான். அவர் 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், என் தங்கையைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்" என்று அவர் கூறியுள்ளார். ஒரு நாள் தான் அவர்களிடம் பேசத் தவறிவிட்டால்கூட, உடனடியாக அவரே தொலைபேசியில் அழைத்து, "இன்று என்ன நடந்தது?" என்று தனது நலனை விசாரிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "என் அம்மா மற்றும் அப்பாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள எனக்குச் சற்று பயமாக இருக்கும். ஆனால், என் தங்கையிடம் நான் எதையும் மறைக்காமல் பேசுவேன், அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்" என்று தனது தங்கையுடனான நெருக்கமான உறவு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.

விபரங்களுக்கு
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு

மறைந்த பழம்பெரும் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்கான நேரம் மற்றும் இறுதிக் கிரியை குறித்த விவரங்களை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்கு பின்னர், அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
நடிகை த்ரிஷா, தொடர்பில் திரையுலகில் வெளியாகும் தகவல்கள்:

நடிகை த்ரிஷா, தொடர்பில் திரையுலகில் வெளியாகும் தகவல்கள்:

நடிகை த்ரிஷா, மலையாளத்தில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த விஸ்வம்பரா திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கடந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித் குமாருடன் 2 படங்களில் நடித்த த்ரிஷா, மலையாளத்தில் டொவினோ தோமஸ் உடன் ஐடென்டிட்டி படத்திலும் அவர் நடித்தார். இந்தநிலையில், நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்றும் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், அரசியலுக்கு வரப் போகிறார் என ஏகப்பட்ட தகவல்கள் பரவி வரும் நிலையில், மீண்டும் நடிப்பு பக்கமே அதிக கவனத்தை த்ரிஷா செலுத்தி வருகிறார். கார்த்தியுடன் கதாநாயகியாக ஒரு படத்தில் த்ரிஷா நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், ஓடிடி வெப் தொடரிலும் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் ஏற்கனவே த்ரிஷா - கார்த்தி ஜோடி பொருத்தம் ரசிகர்களை கவர்ந்தது. அப்போதே, இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்த நிலையில், அதுவும் விரைவில் நடக்கப் போவதாகவும் கூறுகின்றனர். இந்த ஆண்டு த்ரிஷா சற்றே அமைதியான நிலையில், நயன்தாரா மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார். இதன்படி நயன்தாராவின் இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், சல்மான் கான் படத்திலும் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி

அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்

சாய் அபியங்கரை நகைச்சுவை செய்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட காணொளி பதிவில், ஷான் ரோல்டன் "ஹா ஹா" என கமெண்ட் செய்திருந்தது இணையத்தில் விவாதமானது. தான் பொதுவாக கமெண்ட்களைப் படிப்பதில்லை என்றாலும், சிலர் தன்னை டேக் செய்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சந்தோஷை இத்தனை ஆண்டுகளாகத் தனக்குத் தெரியும் என்பதால், அந்தப் பதிவில் எந்தவித வெறுப்பும் இல்லை என்றும், அது வெறும் மகிழ்ச்சியான கேலி மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் முற்றிலும் வெறுப்பு இல்லை என்று குறிப்பிட்ட அவர், "I drink from the well of love" எனக் கூறி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

விபரங்களுக்கு

"மொத ராத்திரி" திரைப்படம் குறித்து பாராட்டிய நடிகர் சூரி

"மொத ராத்திரி" படத்தின் தலைப்பு சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், முழுப் படத்தையும் பார்த்த பிறகு இதுதான் சரியான தலைப்பு என்று தோன்றியதாக நடிகர் சூரி பாராட்டியுள்ளார். குலதெய்வ வழிபாட்டில் தொடங்கி, கண்மூடித்தனமான காதலின் எதார்த்தத்தையும், குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் அலப்பறைகளையும் இப்படம் மிகச்சிறப்பாகக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ளார். நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர். படத்தில் நடித்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த சூரி, இப்படம் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!

திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!

நடிகை நயன்தாரா, ‘டொக்ஸிக்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படும் சில நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது எனத் தெரியவந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான நிழற்படம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலரால் செம்மைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நயன்தாராவின் முகமும் உடையும் மாற்றப்படாமல், அவரது தலைமுடி மட்டும் நீக்கப்பட்டு இந்தப் போலியான நிழற்படம் உருவாக்கப்பட்டுள்ளது.கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டொக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விளம்பர நோக்கத்திற்காகவும் இணையத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இவ்வாறான போலியான நிழற்படங்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////