மலையகப் பகுதிகளில் கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்தவும், போதையற்ற சமூகத்தை உருவாக்கவும் பிரத்யேக விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலைக் காவல்துறை மூலம் சட்டரீதியாகத் தடுத்தாலும், பயன்பாட்டைக் குறைக்க மக்களிடையே மனமாற்றம் அவசியம். இதற்காக மதகுருமார்கள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்தநிலையில் மலையகத்தில் உள்ள அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தி, சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தியை முற்றாக ஒழிப்பது தொடர்பாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை மாஅதிபர் மற்றும் இரத்தினபுரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே தொடர்ச்சியான சிறப்புத் திட்டங்களின் மூலம் மலையகத்தைப் போதையற்ற பிரதேசமாக மாற்றி, மகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
Latest News
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இலவசம் – தமிழக அரசு அறிவிப்பு!
Local
24 August 2026
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை ஒழிக்கும் செயற்பாடுகள் - பாதுகாப்பு பிரதியமைச்சர்
Local
24 August 2026
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை!
Local
24 August 2026
“வணக்கம் சொன்னாலும் கேலி செய்கிறார்கள்” – தமிழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி
Local
24 August 2026
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்தில் புதிய சட்டமூலம் தாக்கல்!
Local
24 August 2026