இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாக நாட்டில் இடம்பெறும் தீவிர குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு மத்தியில், மரண தண்டனை பற்றிய விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ள நிலைமையைக் சுட்டிக்காட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்:
கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.
வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.
வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.
போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.
விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இலவசம் – தமிழக அரசு அறிவிப்பு!
Local
24 August 2026
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை ஒழிக்கும் செயற்பாடுகள் - பாதுகாப்பு பிரதியமைச்சர்
Local
24 August 2026
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை!
Local
24 August 2026
“வணக்கம் சொன்னாலும் கேலி செய்கிறார்கள்” – தமிழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி
Local
24 August 2026
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்தில் புதிய சட்டமூலம் தாக்கல்!
Local
24 August 2026