அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையையோ குற்றம்சாட்டுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்துக்கள் பொட்டு அல்லது திருநீறு அணிவதும், பௌத்தர்கள் கையில் பிரித் நூல் அணிவதும் அவர்களின் மத அடையாளங்களுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட அவர், அதேபோன்று முஸ்லிம் பெண்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிவதும் மத சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்தார்.
எனவே, அரச ஊழியர்கள் தமது மத அடையாளங்களைப் பேணியவாறு பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தெளிவான சுற்றுநிருபங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால அரசியல் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படக் கூடாது எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளித்த சிலர், முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு ஆதரவளித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், கல்முனை மருத்துவமனை தொடர்பான விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகளையும் அப்பகுதி மக்களையும் இனவாதிகளாகச் சித்தரிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மதம் மற்றும் இன அடையாளங்கள் தொடர்பான விவகாரங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாமல், அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Latest News
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026