International23 August 2026

மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!

சீனாவின் ஹானர் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் உருவாக்கிய 'லைட்னிங்' என்ற மனித தோற்றத்தைக்கொண்ட ரோபோ, 100 மீட்டர் இலக்கை 9.32 வினாடிகளில் கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை, ஜமைக்காவின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 2009-ஆம் ஆண்டு 100 மீட்டரை 9.58 வினாடிகளில் ஓடிக் கடந்ததே, மனிதர்களின் உலக சாதனையாக உள்ளது.

இந்த சாதனையை, சீனாவின் இந்த ரோபோ 0.26 வினாடிகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளது.

பீஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுகளுக்கான பயிற்சி சோதனையின் போது, இந்த ரோபோ வினாடிக்கு 14.5 மீட்டர் வரை வேகத்தை எட்டியது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பீய்ஜிங்கில் இடம்பெற்ற அரை மரதன் போட்டியில் 21 கிலோ மீற்றர் தூரத்தை 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்திருந்தது.

அரை மரதனின் போது 169 சென்றி உயரமும், 95 சென்றி மீற்றர் நீளத்தையும் கொண்டிருந்த இந்த ரோபோவின் கால்கள், தற்போதைய போட்டிக்கு முன்னதாக மேலும் 10 சென்றி மீற்றர் வரை நீட்டிக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் தனது உலகளாவிய ஆதிக்கத்தை நிரூபிக்கும் வகையில் சீனா இந்த தொழில்நுட்பங்களை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes