நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று(23) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும்.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.
குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.
வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.
வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.
இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
Latest News
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026