கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் நான்கு பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 வயது சிறுமி உட்பட இரு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடம்பன், வெடித்தலத்தீவு 10ஆம் பிரிவு மற்றும் மாத்தளை–ரத்தோட்டை வீதியின் வெரகம ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கிராண்ட்பாஸ் இங்குருகடை சந்திக்கு அருகில் பாதசாரிக் கடவையை கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தெஹியத்தகண்டிய களுவெவ பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 43 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரைப் பகுதியில் கடற்றொழிலுக்காகச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026