தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றுள்ளது.
இதன்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளர் எ.வ. வேலு, கச்சத்தீவு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அத்துடன், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கச்சத்தீவு தொடர்பான அன்றைய மத்திய அரசின் முடிவின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்த பின்னரே கச்சத்தீவு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.
இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.வுக்கும் பொறுப்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது, கச்சத்தீவு விவகாரத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அமைச்சர் ராஜமோகன் சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இந்த விவாதத்தின்போது ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.
Latest News
ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானம் போல் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது: பேரவையில் முதல்வர் விஜய்
Local
07 September 2026
முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு? : சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் - சட்டப்பேரவையில் பரபரப்பு!
Local
07 September 2026
தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது: முதலமைச்சர் விஜய் ஆதங்கம்
Local
07 September 2026
கொழும்பு முதல் கிராமங்கள் வரை பாடசாலைகளை அச்சுறுத்தும் போதை மாத்திரைகள்! - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
07 September 2026
தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – இன்றைய விலை நிலவரம்!
Local
07 September 2026
நடிகை கயாடு லோஹருக்கு தமிழில் பிடித்த வார்த்தை இதுதான்!
Local
07 September 2026
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரஷ்யாவுடனான போர், குளிர்காலம் வரை நீடிக்கும் என ஸெலென்ஸ்கி எதிர்ப்பார்ப்பு
Local
07 September 2026
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம் - இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
Local
07 September 2026
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது
Local
07 September 2026
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026