General10 September 2026

களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!

களுபோவில - விமலசிறி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இருவரே, இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes