General17 May 2013

மனித கடத்தல் கண்டுப்பிடிப்பு

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை ஐக்கிய ராஜ்சியத்திற்கு அனுப்புவதன் பொருட்டு, ஈக்குவடோர் நாட்டில் இருந்து செயற்பட்ட ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈக்குவடோர் காவல்துறையினர், இவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் சம்வத்தின் போது, மூன்று இந்தியர்கள் மற்றும் இரண்டு ஈக்குவடோர் காவல்துறை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு இவர்கள், ஒருவருக்கு தலா 5 ஆயிரம் டொலர்கள் வீதம் அறவிட்டுள்ளனர்.

இவர்கள் ஈக்குவடோரில் இருந்து மத்திய அமெரிக்கா ஊடாக ஐக்கிய ராச்சியத்திற்கு சட்டவிரோத குடியேறிகளை அனுப்பி வந்துள்ளனர்.

இந்த குழுவினரிடமிருந்து, மடிக்கணினிகள், கடிதங்கள் மற்றும் ஒரு லட்சம் டொலர் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related recommendation
Hiru TV News | Programmes