Entertainment12 July 2026

பாகுபலி பிரபாஸின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் : மனைவியுடன் செட்டில் ஆக ரூ.300 கோடியில் பிரம்மாண்ட வீடு!

'பாகுபலி' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, "பான் இந்தியா" நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் பிரபாஸ் தற்போது பல பிரம்மாண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில், 'பவுசி', 'ஸ்பிரிட்', 'கல்கி-2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

46 வயதான பிரபாஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவரது திருமணம் குறித்து மீண்டும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறலாம் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஐதராபாத்தில் சுமார் இந்திய மதிப்பில் ரூ.300 கோடி செலவில் பிரபாஸ் கட்டி வரும் புதிய பிரம்மாண்ட வீடு, அவரது வருங்கால மனைவிக்காகவே கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரபாஸ் அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes