Entertainment12 July 2026

அமீர்கானின் திருமண மோதிரத்தில் ஒளிந்திருக்கும் பிரமாண்டம் - ஆச்சரியத்தில் திரையுலகம்!

பொலிவுட் திரையுலகின் நட்சத்திர நடிகர் அமீர்கான், கௌரி ஸ்ப்ராட் என்பவரைத் தனது மூன்றாவது வாழ்க்கைத் துணையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த திருமணம் எளிமையாக நடந்தாலும், மணப்பெண் கௌரிக்கு அமீர்கான் அணிவித்த திருமண மோதிரம் தற்போது பொலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகவும், ஆச்சரியமாகவும் மாறியுள்ளது.

அதன்படி இந்த மோதிரத்தின் மையப்பகுதியில் மிகவும் அரிதான "கேபோசோன்" ரக ரூபி கல் பதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அந்த ரூபி கல்லைச் சுற்றி 40 இயற்கையான வைரங்கள் பதிக்கப்பட்டு மோதிரம் மெருகேற்றப்பட்டுள்ளது.

இந்த மோதிரத்தை வடிவமைக்க மட்டும் சுமார் 256 மணிநேர கடின உழைப்பு தேவைப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 136 திறமையான கலைஞர்களின் கூட்டு முயற்சியால் இந்த மோதிரம் செதுக்கப்பட்டுள்ளது.

திருமணம் எளிமையாக நடைபெற்ற போதிலும், மோதிரத்தின் இத்தகைய பிரம்மாண்டமான வடிவமைப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes