அயர்லாந்தின் ஸ்லிகோ (Sligo) கவுன்டி கடற்கரையில், சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளமும் 200 கிலோவிற்கும் அதிகமான எடையும் கொண்ட இறந்த கிரீன்லாந்து சுறா (Greenland Shark) ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அயர்லாந்து கடற்கரையில் இந்த அரிய வகை சுறா கரை ஒதுங்குவது இதுவே முதல் முறையாகும்.
உலகின் மிக நீண்ட காலம் வாழும் இந்தச் சுறாக்கள் சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.
தற்போது கரை ஒதுங்கியுள்ள இந்தச் சுறா , சுமார் 150 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
கிரீன்லாந்து சுறாக்களின் ஆயுட்கால அளவுகோலின்படி, 150 ஆண்டுகள் என்பது அதன் இளமைப் பருவம் ஆகும்.
கரை ஒதுங்கிய சுறாவின் உடலை அயர்லாந்து தேசிய அருங்காட்சியகம் மற்றும் கால்நடை ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் மீட்டு, பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
வழக்கமாக இவற்றுக்குக் கண் பார்வை குறைபாடு அல்லது குருட்டுத்தன்மை இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டின் புதிய ஆய்வின்படி, ஆழ்கடலின் குறைந்த ஒளியிலும் நன்கு பார்க்கும் வகையில் இவற்றின் கண்கள் மற்றும் விழித்திரைகள் ஆரோக்கியமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் தசைக் கூறுகளில் உள்ள வேதிப்பொருட்கள் உறைபனித் தடுப்பானாகச் செயல்படுகின்றன.
மனிதர்களைப் போலன்றி, முதுமையினாலும் ஏற்படும் இதயப் பாதிப்புகள் மற்றும் டி.என்.ஏ (DNA) சேதங்களை எதிர்க்கும் / சரிசெய்யும் அசாதாரண மீள்திறனை இவை பெற்றுள்ளன.
இதன் கல்லீரல் மட்டும் 50 கிலோகிராம் எடையைக் கொண்டிருந்தது.
இந்தச் சுறாவின் கண்கள் (Lens), இதயம் மற்றும் திசு மாதிரிகள் மூலம் அதன் துல்லியமான வயது, வாழ்வியல் பண்புகள் மற்றும் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் விரிவான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
அஞ்ச வேண்டிய நிலை": பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் இன்ஸ்டாகிராம் பதிவு!
Local
22 July 2026
சிவகாசி துர்க்கை பரமேஸ்வரி கோயிலில் பிஸ்கட் பொதிகளால் சிறப்பு அலங்காரம்
Local
22 July 2026
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
Local
22 July 2026
400 ஆண்டுகள் வாழக்கூடிய அரிய வகை கிரீன்லாந்து சுறா: அயர்லாந்தில் கரை ஒதுங்கியது!
Local
22 July 2026
நாடு முழுவதும் 112 அவசர சோதனைகள்: நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி!
Local
21 July 2026
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து இயக்குநர் கொடுத்த புதிய அப்டேட்
Local
21 July 2026
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது : டெல்லியில் பரபரப்பு
Local
21 July 2026
இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு
Local
21 July 2026
செம்மணி மனித புதைகுழி : 39ஆம் நாள் அகழ்வில் 13 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன!
Local
21 July 2026
'குஷி 2' படத்தில் விஜய்யின் மகன் - ஜோதிகாவின் மகள்? எஸ்.ஜே. சூர்யா பதில்
Local
21 July 2026