Entertainment02 August 2026

வேதனை தந்த இரசாயனக் கழிவு நீர் - மொட்டை ராஜேந்திரனின் பின்னணியில் உள்ள சோகக் கதை

தனது தனித்துவமான குரலாலும், வில்லத்தனம் கலந்த நகைச்சுவை நடிப்பாலும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன்.

தற்போது 67 வயதாகும் இவர், இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை 'சிக்ஸ்பேக்' கட்டமைப்புடன் ஆரோக்கியமாக பராமரித்து வருகிறார்.

தினமும் வயிற்றுப் பகுதிக்கான தனிப்பயிற்சிகளை அர்ப்பணிப்புடன் செய்வதே தனது இந்த உடலமைப்பிற்கு காரணம் எனக் கூறும் அவர், தனது வாழ்க்கைப் பாதையை மாற்றிய வேதனையான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றிய அவர், நல்ல சுருண்ட தலைமுடியுடனும் மீசையுடனும் இருந்துள்ளார்.

ஒரு மலையாளப் படப்பிடிப்பின் போது, இரசாயனக் கழிவுகள் கலந்திருந்த தண்ணீரில் 15 அடி உயரத்தில் இருந்து குதித்ததால், அவரது தலைமுடியும் புருவங்களும் உதிர்ந்துபோனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து ஆரம்பத்தில் மிகுந்த வேதனையைத் தந்த போதிலும், இறுதியில் அவரது திரை வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, இன்றைக்கு பலராலும் அறியப்படும் ஒரு சிறந்த நடிகராக அவரை உருவெடுக்க வைத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes