Entertainment04 September 2026

முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளிகள்!

எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான தயாரிப்புப் பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், முதலமைச்சர் விஜய்யின் புகழ்பெற்ற சைகையைத் தத்துருவமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையின் நிழற்படங்களும் காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வழக்கமான சிலைகளின் வடிவமைப்பு முறைகளில் இருந்து மாறுபட்டு, நவீன உடையில் இருக்கும் விநாயகர் சிலை முதலமைச்சரின் ஸ்டைலான செய்கையைக் காட்டும் விதமாகச் செதுக்கப்பட்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த சிலைகளின் தயாரிப்பு மற்றும் தோற்றம் குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes