Sports18 June 2026

குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

கால்பந்து தொடரின் குழு 'எல்' ஆட்டத்தில், குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டல்லாஸ் மைதானத்தில் 70,389 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.

ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் எச். கேன் முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து பதிலடி கொடுக்க முயன்ற குரோஷியா அணிக்கு, 36 ஆவது நிமிடத்தில் பி. சுசிக் உதவியுடன் எம். பதுரினா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இதன்பின், 42 ஆவது நிமிடத்தில் டி. ரைஸ் கொடுத்த பந்தைக் கொண்டு எச். கேன் மீண்டும் ஒரு கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தினார்.

ஆனால், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45'+5 நிமிடங்கள்) ஐ. பெரிசிக் கடத்திய பந்தின் மூலம் குரோஷியாவின் பி. மூசா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய உடனே இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. 47 ஆவது நிமிடத்தில் இ. ஆண்டர்சன் (E. Anderson) உதவியுடன் ஜே. பெலிங்ஹாம் (J. Bellingham) இங்கிலாந்து அணிக்கான 3 ஆவது கோலை அடித்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் பி. சாகா (B. Saka) கொடுத்த பந்தை, எம். ராஷ்ஃபோர்ட் கோலாக மாற்றினார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
Related recommendation
Hiru TV News | Programmes