Sports11 July 2026

தொடர் தோல்வியின் எதிரொலி - இந்திய அணியை மறுசீரமைக்கும் பிசிசிஐ

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, அணியில் முறையான மாற்றங்களை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணி, சமீபகாலமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துடனான டி20 தொடர்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்தத் தோல்விகள் அணி நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பிசிசிஐ கருதுகிறது.

உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பரிசோதனை முயற்சிகளில் பிசிசிஐ ஈடுபட்டது. ஆனால், இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்திலும் தொடர்களைத் தவறவிட்டுள்ளது. இந்த சரிவைச் சரிசெய்ய பிசிசிஐ தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

2028ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரையும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளையும் கருத்தில் கொண்டு, வீரர்களின் தேர்வு மற்றும் கள வியூகங்களை மறுபரிசீலனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆரம்பமாகவுள்ள டி20 தொடருக்கு முன்னதாக, இந்தக் கூட்டத்தின் முடிவுகள் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes