நியூ ஜெர்சியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, ஆர்ஜென்டினாவுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஸ்பெயின் அணி மேற்கொள்ளவிருந்த இறுதிப் பயிற்சி அமர்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூ யோர்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதால், மெலனி லேன் பயிற்சி மைதானத்தில் நடக்கவிருந்த ஸ்பெயின் அணியின் பயிற்சி இடைநிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்பு விதிமுறைப்படி, மைதானத்தைச் சுற்றி எட்டு மைல் சுற்றளவுக்குள் மின்னல் தாக்கம் கண்டறியப்பட்டால், வெளிப்புற விளையாட்டுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இதன்படி, பயிற்சி இரத்து செய்யப்பட்டு, வீரர்கள் உள்ளக மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் ஐந்து மைல் தொலைவில் பயிற்சி மேற்கொண்ட ஆர்ஜென்டினா அணி, 45 நிமிடத் தாமதத்திற்குப் பிறகு பயிற்சியைத் தொடர்ந்தது.
ஸ்பெயின் அணிக்கு வேறொரு நேரத்தில் பயிற்சி பெற மாற்று நேரம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனடா காட்டுத்தீ காரணமாக நிலவும் மோசமான காற்றின் தரத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் கடும் மழையும் உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கான ஏற்பாடுகளில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் நடப்பு செம்பியன் ஆர்ஜென்டினாவும், ஐரோப்பிய செம்பியன் ஸ்பெயினும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம் : முக்கிய காரணம் இது தான்..!
Local
19 July 2026
பிலியந்தலையில் துப்பாக்கிச்சூடு : போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்!
Local
19 July 2026
வரி செலுத்தாதோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
19 July 2026
இரத்மலானை குடியிருப்பு வளாகத்தில் தீப்பரவல் – தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
Local
19 July 2026
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் - வரலாறு படைத்த எம்பாப்பே
Local
19 July 2026
மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!
Local
19 July 2026
மனவலிமையால் ஜொலிக்கும் யாஸ்திகா பாட்டியா!
Local
19 July 2026
இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட முக்கிய கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழாவில் சினிமா பாடல்கள்,ஆடல் பாடல்களுக்கு தடை!
Local
19 July 2026
கோல் மழை பொழிந்த இங்கிலாந்து - பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி!
Local
19 July 2026