வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டுத் தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
2026 ஜூன் 3 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின்கீழ், உரிய கால அவகாசத்திற்குள் இணங்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
இந்தநிலையில் இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்படும்.
அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து, குறைபாடுகளைச் சரிசெய்ய வரி செலுத்துபவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த 30 நாட்களுக்குள் இணங்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும்.
நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தச் சட்டங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை குறிவைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ஒத்துழைப்பு வழங்கும் குடிமக்களை இது பாதிக்காது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Latest News
லோர்ட்ஸில் ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று
Local
19 July 2026
சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம் – டெஸ்க்டொப் பயனர்கள் பாதிப்பு!
Local
19 July 2026
கடற்றொழிலாளர்கள் அவதானம் : கடற்பரப்புகள் கொந்தளிப்பு - விசேட எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!
Local
19 July 2026
டெங்கு பாதிப்பு: பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
Local
19 July 2026
3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணியுடன் ஜெண்டயா : சமூக வலைத்தளங்களில் சர்ச்சை!
Local
19 July 2026
வலுக்கட்டாயமாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்டாரா சோனம் வாங்சுக்?
Local
19 July 2026
சர்வதேச தூதுக்குழு களத்தில் : செம்மணி விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்!
Local
19 July 2026
ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா : நடக்கப்போவது என்ன?
Local
19 July 2026
இன்று வெளியே செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? : பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
19 July 2026
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம் : முக்கிய காரணம் இது தான்..!
Local
19 July 2026