ஹொங்கொங்கில் நேற்று நடைபெற்ற 14 ஆவது ஆசிய நெட்போல் செம்பியன்ஷிப் தொடரின் குழுநிலைப் போட்டி ஒன்றில், இந்திய அணியை 100-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைப்பந்து அணி, வெற்றி பெற்றுள்ளது.
திஷாலா அல்கம தலைமையிலான இலங்கை அணி, போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி நான்கு சுற்றுகளையும் எளிதாகக் கைப்பற்றியதுடன், 66 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், மாலைதீவு அணிக்கு எதிரான கடைசி குழுப்போட்டி மீதமுள்ள நிலையிலும், இலங்கை அணி அரைஇறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, நொக்-அவுட் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் மாலைதீவு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு குழுநிலைப் போட்டியில் நடப்பு செம்பியனான சிங்கப்பூரை 56-42 என்ற புள்ளிக் கணக்கில் மலேசிய அணி வீழ்த்தியுள்ளது.
Latest News
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026