General20 September 2025

குரங்குகளால் அவதியுறும் அம்பாறை மக்கள்

குரங்குகளின் தொல்லையால் அம்பாறை மாவட்ட பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



நகர வர்த்தகர்கள், விவசாயிகள்,பாதசாரிகள் என பலரும் தினந்தோறும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



தினமும் கொத்தணியாக 300 க்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





Related Recomands
Hiru TV News | Programmes