மலையக அபிவிருத்தி அதிகார சபை கலைக்கப்படக்கூடாது என்பதனை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், மலையக அதிகாரசபை கலைக்கப்படாது என அரசாங்கம் வாய்மொழி உறுதி அளித்தாலும், எழுத்து மூல உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இந்த அதிகாரசபைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதன் ஊடாக அது, கலைக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம். மலையக அதிகார சபையானது, அரசாங்கத்தின் கலைக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் மறுசீரமைப்பின் பெயரில் அதிகாரக் குறைப்பு செய்யப்படக்கூடாது என்றும், சமூக நலனுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படும் எனவும், கையொப்பமிட்ட மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்கள் வழியாக மனுவின் மாதிரி வெளியிடப்பட்டு கையெழுத்து சேகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்

Latest News
கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
Local
20 September 2025

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா
Local
20 September 2025

லண்டன் தொடருந்து வலையமைப்பில் ஒரே நாளில் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது
Local
20 September 2025

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி பார்க்க முயற்சிப்பதாக ரணில் குற்றச்சாட்டு
Local
20 September 2025

ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
Local
20 September 2025

பெண் சாரதிகளுக்கு விமானப் பணிப்பெண்களைப் போல சீருடை - பிமல் ரத்நாயக்க
Local
20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்
Local
20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்
Local
20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை
Local
20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்
Local
20 September 2025