General20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்

தம்மை பாதுகாத்து, சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரை தாம் பார்க்க வந்ததாக முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்திக்க வந்த மக்கள் குழு தெரிவித்திருந்தது.

விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்கு சென்று வசித்து வரும் மஹிந்த ராஜபக்ஷவை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர்.

அதன்படி இன்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவொன்று தங்காலைக்கு பயணித்திருந்தது.

எத்தனை முறை காயப்படுத்தினாலும் மீண்டெழுவோம் எனவும் “ சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க, நாங்கள் இங்கிருந்து மீண்டும் ஆரம்பிப்போம், அப்பச்சியின் மகன் எங்களோடு தான் உள்ளார், நாங்கள் அவருடன் எதிர்காலத்தில் பயணத்தைத் தொடர்வோம், எப்போதும் எங்களுக்குப் பயமென்பதில்லை ” என மஹிந்தவை சந்திக்க வந்த பெண் ஒருவர் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.
Related Recomands
Hiru TV News | Programmes