General20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்

புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. 
 
சுமார் 03 மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
குறித்த கட்டடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. 
 
இருப்பினும் கள நிலைமைகளை கருத்திற்கொண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேலதிகமாக பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Recomands
Hiru TV News | Programmes