பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
Latest News
2024 சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணவர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு
Local
30 January 2026
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 13 வரை நீடிப்பு
Local
30 January 2026
தங்க விலையில் பெரும் வீழ்ச்சி : பவுணுக்கு ரூ. 20,000 குறைவு
Local
30 January 2026
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு : 63 வயதுடைய மற்றொரு சந்தேகநபர் கைது
Local
30 January 2026
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு
Local
30 January 2026
41வது திருமதி உலக அழகிப் போட்டி: இலங்கையின் சபினா யூசுப் மூன்றாம் இடம் பிடித்து சாதனை
Local
30 January 2026
சிறுமியின் துயரத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி : மதகுருவுக்கு 10 ஆண்டு கடூழியச் சிறை
Local
30 January 2026
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ. 1,750 ஆக உயர்வு - இன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது
Local
30 January 2026
இலங்கை - இங்கிலாந்து டி20 தொடர் இன்று ஆரம்பம்: வெற்றி பெறும் முனைப்பில் இலங்கை அணி
Local
30 January 2026
உள்ளூர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்க வாய்ப்பு : ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றம்
Local
30 January 2026