General10 October 2025

அமைச்சரவையின் புதிய மாற்றத்திற்கு என்ன காரணம் - அமைச்சர் விளக்கம்

அரசாங்கத்தின் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், புதிய அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். 
 
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த அவர், அமைச்சர்களின் எண்ணிக்கை எந்த நிலையிலும் 25 என்ற எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், 
 
அரசாங்கத்தின் பணிகளை துரிதமாக முன்னெடுக்க தேவையான பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சிலரை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்தது. 
 
அதற்கேற்பவே இன்று சில பொறுப்புகள் புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
 
Related Recomands
Hiru TV News | Programmes