General19 October 2025

மலையக மார்க்கத்தில் நாளை 7 தொடருந்துகள் ரத்து

இஹலகோட்டைக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து தடம்புரள்வு காரணமாக, மலையக தொடருந்து மார்க்கத்தில் நாளை (20) இயக்கப்படவிருந்த ஏழு நீண்ட தூர தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இ ரத்து செய்யப்பட்ட தொடருந்து சேவைகள் விபரம்:

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படுபவை

காலை 05:50 - கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை.

காலை 07:00 - கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை (நகர்சேர் கடுகதி)

காலை 10:35 - கொழும்பு கோட்டை முதல் மாத்தளை வரை.

ஏனையவை

காலை 04:50 - மாத்தளை முதல் கொழும்பு கோட்டை வரை.

காலை 05:00 - கண்டி முதல் பெலியத்த வரை.

காலை 06:15 - கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை.

காலை 08:30 - பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை.

இதனிடையே, பதுளை நோக்கிச் செல்லும் சில தொடருந்துகள் நாளை கண்டியிலிருந்து தமது பயணத்தைத் தொடங்கும் எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes