சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை தடுக்க, 'மெட்டா' நிறுவனம் தங்களின், 'வட்சப், பேஸ்புக்' தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள், 'டிஜிட்டல்' கைது என, பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன.
இந்த மோசடிகள் பெரும்பாலும், 'வட்சப், பேஸ்புக்' தளங்கள் மூலம் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செயலிகளில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அதன் தாய் நிறுவனமான, 'மெட்டா' அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 'பேஸ்புக் மெசெஞ்சரில்' செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடியை கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது.
குறித்த அமைப்பு புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் தொடர்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் என கூறப்படுகிறது.
அதேபோன்று 'வட்சப்பில் அறிமுகம் இல்லாத நபர்களுடன், காணொளி உரையாடலில் ஈடுபடும் போது , தொலைபேசி திரையை பகிரும் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இது இணைய மோசடி கும்பல் வங்கி விபரங்கள் அல்லது ஒருதடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுசீட்டு எண்களை திருட பயன்படுத்தும் வழிமுறை என குறிப்பிடப்படுகின்றது.
Latest News
அஜித்தின் புதிய திரைப்படம் - அடுத்தடுத்து விலகும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
Local
18 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்
Local
18 September 2026
அனைத்து சாதனைகளும் தகர்க்கப்பட்டன! மலையாள திரையுலகின் புதிய வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'!
Local
18 September 2026
வில்பத்து தேசிய பூங்கா எல்லையில் மருத மரங்கள் எரிப்பு - உடனடி விசாரணைக்கு சுற்றாடல் அமைச்சு உத்தரவு!
Local
18 September 2026
நடிகர் ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை? – வெளியான தகவலால் பரபரப்பு
Local
18 September 2026
ஒரு நூற்றாண்டில் ஒரே முறை! நிலவில் உருவான புதிய பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
18 September 2026
விமல் வீரவன்சவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாக உள்ளதா என விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு!
Local
18 September 2026
அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம் - மரபணு சோதனையில் வெளியான ஆச்சரியம்
Local
18 September 2026
62 இலட்சம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் - குடும்பப் பொறுப்புக்களே முக்கிய காரணம் என ஆய்வில் தகவல்!
Local
18 September 2026
இங்கிலாந்து அணியுடன் தொடர் தோல்வி: இலங்கை அணியின் பலவீனங்களை உடைத்த சங்கக்கார!
Local
18 September 2026