General26 October 2025

எல்ல ஒடிசி தொடருந்து தடம்புரள்வு

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த எல்ல ஒடிசி (Ella Odyssey) தொடருந்து, இன்று பிற்பகல் (26) வட்டகொடை தொடருந்து நிலையத்திற்கு அருகே தடம் புரண்டதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் மலையக மார்க்கத்திலான ஏனைய தொடருந்து சேவைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து எல்ல ஒடிசி தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றொரு தொடருந்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes