General17 November 2025

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

மாத்தளை - மஹாவெல காவல்பிரிவின் பல்லேபொல-மடவல வீதியில் உள்ள நாரங்கமுவ பகுதியில், உந்துருளி ஒன்று , எதிர்த் திசையில் வந்த மற்றொரு உந்துருளியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 
 
பல்லேபொலவிலிருந்து மடவல நோக்கிச் சென்ற உந்துருளியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 
விபத்தில் பலத்த காயமடைந்த இரு உந்துருளி ஓட்டுநர்களும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி ஓட்டுநர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
உயிரிழந்தவர் நாலந்தாவைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 
உடலம் மாத்தளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹாவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes