இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி நாட்டில் சமீபத்திய சொகுசு உயர் ரக வாகன இறக்குமதியில் Mercedes-Benz முதலிடத்தில் உள்ளது.
இதற்கமைய மொத்தமாக 28 புதிய Mercedes-Benz வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 போர்ஷேக்கள் ((Porsche)), 4 பென்ட்லிகள் (Bentley), மற்றும் ஒரு லம்போர்கினி (Lamborghini)ஆகிய வாகனங்களும் இதில் உள்ளடங்குகின்றது.
அத்துடன் பயன்படுத்தப்பட்ட (Pre-owned) வாகன பிரிவின் முன்னணியிலும் Mercedes-Benz உள்ளது.
மொத்தம் 54 pre-owned Benz வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 18 C-Class, 13 E-Class, 1 S-Class மற்றும் 12 GLB மொடல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பிற சொகுசு வாகனப் பிரிவுகளில் Audi வாகனங்கள் 37 பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக A3 மொடல்கள் 28 இடம்பெற்றுள்ளன.
அத்துடன் Lexus வாகனங்கள் 15 பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், BMW வாகனங்கள் 17 பதிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்த வாகனப் பதிவுகள் 380 ஆக இருந்தபோது, அதில் பெரும்பாலானவை ரூ. 5 மில்லியனுக்கும் குறைவான விலையில் விற்கப்படும் BAW (263) மற்றும் Wuling (79) வாகனங்களாகும்.
இந்தநிலையில் மொத்தமாக 4,025 மின்சார வாகனங்கள் (EVs) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 115 மின்சார SUV வாகனங்கள் (EVs) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் GAC – 46 மற்றும் Changan – 30 வாகனங்கள் அடங்கும்.
BYD வாகனங்கள் 27 பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் ATTO-2 மொடல் மட்டும் 19 உள்ளது.
இருசக்கர மின்சார வாகனப் பதிவுகள் 3,478 ஆகும்.
இதில் Yadea வாகனங்கள் 1,799 ஆக இருந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கத்தின் வருவாய் ரூ.154.5 பில்லியனால் அதிகரித்துள்ளது.
இதில் 63.6% வாகன இறக்குமதியிலிருந்து வந்த வருவாய் என மதிப்பிடப்படுகிறது.
இதற்கமைய செப்டெம்பர் மாதத்தில் சொகுசு வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு ரூ 98 பில்லியன் (9,800 கோடி) வரி வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!
Local
26 July 2026
இன்றைய வானிலையில் மாற்றம்: மழை பெய்யப்போகும் மாவட்டங்கள் எவை?
Local
26 July 2026
விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி!
Local
26 July 2026
ஜெர்மனியில் மக்கள் பேரணி மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி, 14 பேர் காயம்!
Local
26 July 2026
அமெரிக்காவின் 10% வரி விதிப்பு: இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்பு!
Local
26 July 2026
கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: 9 பேர் விளக்கமறியலில்!
Local
26 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
26 July 2026
சிறந்த விடயங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் - முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ஜெய்!
Local
26 July 2026
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை!
Local
26 July 2026
மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்!
Local
26 July 2026