இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் தெற்கு கிராமங்களான டீர் கிஃபா (Deir Kifa) மற்றும் ஷெஹோர் (Chehour) ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இராணுவம் அந்தப் பகுதிகளில் உள்ள கட்டடங்களைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலின் இராணுவம் தென் லெபனானில் தாக்குதல்கள் நடந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் உட்கட்டமைப்பை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
........................
முன்னைய செய்தியின் விபரம் :-
லெபனானின் தெற்கு பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள, பாலஸ்தீன ஏதிலிகள் முகாம் மீது நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் லெபனானின் தெற்கு பகுதியிலிருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்து வருகின்றது.
இந்த நிலையிலேயே, குறித்த ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்படைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனையடுத்து, அந்த பகுதியில், மேலும் வன்முறைகள் சம்பவங்கள் பதிவாகும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
காலி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
ரன்வீர் - தீபிகா வீட்டிற்கு வந்த இரண்டாவது குட்டி இளவரசி!
Local
20 September 2026
வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளுக்கானவர் இல்லை: முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் : கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?
Local
20 September 2026
AI துறையை அழிக்க சதி? எதிர்த்தரப்பை வீழ்த்த 'AI FORCE' அமைப்பு உருவாக்கம் - ட்ரம்ப் அறிவிப்பு!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை!
Local
20 September 2026
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி!
Local
20 September 2026
நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார்!
Local
20 September 2026
கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!
Local
20 September 2026