General20 September 2026

தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கைது : பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 38, 36 மற்றும் 31 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கிலிருந்து வானூர்தி மூலம் இலங்கை வந்த அவர்கள், சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes