General26 November 2025

தொடர் மாடி குடியிருப்பில் தீ விபத்து - 13 பேர் பலி

ஹொங்கொங்கில் உள்ள தாய்போ மாவட்டத்தில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட, 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
சுமார் 700 குடியிருப்பாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும் பலர் தீயில் சிக்கியிருக்கலாம் எனவும், உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
புனரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த 31 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மூங்கிலால் ஆன சாரத்தின் (bamboo scaffolding) வழியாகவே தீ பரவியுள்ளதாகவும், காணொளி காட்சிகளின்படி, அருகருகே அமைந்துள்ள குறைந்தது ஐந்து கட்டிடங்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes