General30 November 2025

கண்டியிலிருந்து கொழும்புக்கு மாற்றுப்பாதை

யக்கல மற்றும் திஹாரியவிற்கு இடையிலான ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதி தாழிறங்கியுள்ளது. 
 
யக்கல பகுதியிலிருந்து கண்டி - கொழும்பு பிரதான வீதி இன்று காலை மூடப்பட்டது. 
 
இதற்கமைய காவல்துறை மாற்றுப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 
 
இதன்படி, யக்கல பகுதியிலிருந்து தெற்கு நோக்கித் திரும்பி நெல்லிகஹமுல வழியாக திஹாரியவிற்குள் நுழைந்து கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு நுழைய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes