General01 December 2025

குடிநீர் பயன்படுத்துவதில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் - எச்சரிக்கை

வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 
 
அத்துடன் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறும் அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கேட்டுள்ளார். 
 
அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால், முடிந்தவரை கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 
 
அதேபோன்று, சிறிய குழந்தைகளுக்கும் கொதித்தாறிய நீரை மாத்திரமே அருந்துவதற்கு வழங்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்க வாய்ப்புள்ளன. 
 
எனவே, வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
 
அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமில் முத்துக்குட எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes