General01 December 2025

அனர்த்த நிவாரணப் பணிகளில் இலங்கை விமானப்படையின் அர்ப்பணிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணிகளில் இலங்கை விமானப்படையினர் தொடர்ந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். 
 
நாட்டின் பல பாகங்களில் இயற்கை அனர்த்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானப்படையின் மீட்புக் குழுக்கள் வான்வழியாகவும் தரைவழியாகவும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் விமானப்படையின் விமானிகள், குழுவினர் மற்றும் தரைப்படையினர் துரிதமாகச் செயற்படுகின்றனர். 
 
அத்துடன் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமான உணவுப் பொதிகள், குடிநீர் என்பன விமானப்படையின் விமானங்கள் மூலம் வான்வழியாகக் கொண்டுசெல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
 
குறிப்பாக, தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது மிகுந்த உதவியாக அமைந்துள்ளது. 
 
மேலும் நோயாளர்களுக்குத் தேவையான ஒட்சிசன் (Oxygen) மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய நேரத்தில் விநியோகிக்கும் பணிக்கு விமானப்படையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. 
 
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோரை, விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் பாதுகாப்பாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் சேவையானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
 
 
Related recommendation
Hiru TV News | Programmes