General01 December 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SLT-Mobitel இன் நிவாரணம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க SLT-Mobitel, கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து 247 என்ற இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
24 மணி நேர மருத்துவ ஆலோசனை மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்காக இந்த அவசர உதவி எண் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த சேவை, உதவி தேவைப்படும் அழைப்பாளர்களை, மருத்துவ ஆலோசனைக்காக வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் கிடைக்கக்கூடிய அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இணைக்கிறது.
 
காயங்கள், காய்ச்சல், நீர் மூலம் பரவும் நோய்கள், சுவாசப் பிரச்சினைகள் அல்லது வெள்ளத்தால் ஏற்படும் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ள எவரும் உடனடி மருத்துவ ஆலோசனைக்காக 247 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
 
இந்த சேவை இலங்கையில் உள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்புகள் மூலமாகவும் அணுகக்கூடியது ஆகும்.
Related recommendation
Hiru TV News | Programmes