General01 December 2025

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் இன்று (1) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீனன்குடா - 5 ஆம் கட்டை பகுதியைச் சேரந்த 59 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து சீனன்குடா காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related recommendation
Hiru TV News | Programmes