General06 December 2025

உங்கள் மாவட்டம் எச்சரிக்கையில் உள்ளதா? மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இதன்படி கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes