Sports13 December 2025

நாளை ஜோன் சினாவின் இறுதி போட்டி

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது இரண்டு தசாப்த கால வாழ்க்கையில் நாளை (14) தனது கடைசி இன்-ரிங் (WWE) போட்டியை எதிர்கொள்ள உள்ளார்.
 
மெயின் ஈவென்ட்டில் (Saturday Night’s Main Event) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் அவர் குந்தரை (GUNTHER ) எதிர்கொள்வார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
இந்தப் போட்டி ஜோன் சினாவின் புகழ்பெற்ற 20 ஆண்டுகால வாழ்க்கையின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. 
 
ஜோன் சினாவின் இறுதி போட்டியின் எதிர் போட்டியாளரை தேர்ந்தெடுப்பதற்காக "Last Time Is Now" என்ற சிறப்புப் போட்டி நடத்தப்பட்டது, இந்த போட்டியில் குந்தர் வெற்றி பெற்றதன் மூலம் அவர் ஜோன் சினாவுடன் மோதவுள்ளார். 
 
இந்த போட்டி நாளை இரவு 8:00 மணிக்குத் தொடங்கும். 
 
அதன்படி, இலங்கையர்கள் இந்த போட்டியை  நாளை (14) காலை 6:30க்கு காணலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes