General15 December 2025

கொலம்பியாவில் பாடசாலை பேருந்து விபத்து: 17 பேர் பலி

வடக்கு கொலம்பியாவில் மாணவர்கள் மற்றும் பெரியவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். 
 
இந்த விபத்து அதிகாலை 5.40 அளவில் ரெமெடியோஸ் மற்றும் சரகோசா ஆகியவற்றை இணைக்கும் வீதியில் இடம்பெற்றுள்ளது. 
 
பாடசாலை பயணத்திற்குப் பின்னர் கரீபியன் நகரமான டொலுவிலிருந்து மெடலினுக்குப் பேருந்து பயணித்துக்கொண்டிருந்ததாகவும், ஆன்டிகுவெனோ உயர்நிலைப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றதாகவும் ஆன்டிகுவியாவின் ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 
 
மேலும் மாணவர்கள் கடற்கரையில் தங்கள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடினர் என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்டிருந்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes