General18 December 2025

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கல்லடிப் பாலம்

இலங்கையில் நீண்ட பாலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலத்தின் தரம் தொடர்பாக ஐரோப்பியத் தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுவினர் இன்று ஆய்வுகளை மேற்கொண்டனர். 
 
நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்காக நப்லஸ் பல்கலைக்கழக பேராசிரியர் லூயி டி சார் நோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்ப நிபுணர்கள் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் தரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். 
 
இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes